Dairymilk Chocolate Worm Issue | Pic Snipped from Video (Photo Credit: Twitter)

ஏப்ரல் 03, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet, Kallakurichi) பகுதியில் செயல்பட்டு வரும் மாளிகைக்கடையில், இளைஞர் ஒருவர் விலையுயர்ந்த டைரி மில்க் (Dairy Milk Chocolate) சாக்லேட்டை வாங்கி இருக்கிறார்.

இந்த சாக்லெட்டை அவர் சாப்பிட பிரித்து பார்த்தபோது, அதில் புழுக்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பதறியபடி அதன் காலாவதி தேதியை சரிபார்க்கும்போது, செப்டம்பர் வரை நாட்கள் இருந்துள்ளன.

இதனால் வெதும்பிப்போன இளைஞர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகவே மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணையில் களமிறங்கியுள்ளனர். Stunt Biker Arrested: நடுரோட்டில் 2 பெண்களுடன் சாகசம் செய்த இளைஞர்; வீடியோ சிக்கியதால் அதிரடி கைது.!

டைரி மில்க் சாக்லெட்டை பொறுத்த வரையில், அது பிரதானமான முன்னணி விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்டுகிறது. உண்மையில் அந்நிறுவனத்தின் தரக்குறைபாடு காரணமாக சாக்லேட்டில் புழுக்கள் வைத்தனவா?.

அல்லது மாநிலத்தில் டைரி மில்க் பெயரில் போலியான நிறுவனங்கள் சாக்லேட்டை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியதால் வந்த வினையா? என்பது குறித்த தகவல்கள் இல்லை. விசாரணைக்கு பின்னர் இவை உறுதிப்படுத்தப்படும்.