வந்தது தித்திப்பு செய்தி.. மகளிர் உரிமை தொகை.. இன்றே வரவு வைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி.!
தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைகளுக்கு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொங்கலை மக்கள் கொண்டாடும் வகையில், தொகை இன்று வரவு வைக்கப்படுகிறது.
ஜனவரி 09, தலைமை செயலகம் (Chennai News): தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. எதிரி பெரியார்., இனி நாதகவின் பணி இதுதான் - சீமான் ஆவேசம்.. பரபரப்பு பேச்சு.!
தமிழ்நாடு முதல்வர் உத்தரவு:
எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் கவைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000/- வரவுவைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 09, 2025 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

