ஜனவரி 09, புதுச்சேரி (Pondicherry News): கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் (Naam Tamilar Katchi) மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (NTK Seeman), ஈ.வெ இராமசாமி (EV Ramasamy Periyar) பெரியார் தொடர்பாக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து இருந்தார். இந்த விஷயம் எதிர்ப்பை சந்தித்த காரணத்தால், இன்று பெரியாரின் ஆதரவாளர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். இன்று புதுச்சேரியில் நடக்கும் நா.த.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள சீமான் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளார்.
இஸ்லாமியருக்கு எதிராக பெரியார் பேச்சு:
இதனால் சீமான் வரும் தகவலை அந்த அங்கும் பெரியார் ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தி இருக்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "நம்மில் கீழானவர்கள் என பெரியார் பேசினார். நம்மில் கீழானவர் என்பவர் யார்?. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை எதிரிகள் என்று கூறியது யார்?. தமிழர் என பேசுபவர்கள் இந எதிரி என கூறியது யார்? தமிழ் பேசும் நாங்கள் யாருக்கு எதிரி?. தமிழர் இல்லாமல் திராவிட இனம் எது? தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறுவது பெரியார். Ranipet Accident: லாரி - மேல்மருவத்தூர் சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதி சோகம்; 4 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
கம்பன், வள்ளுவன், இளங்கோ யார்?
தமிழர்களாகிய நாங்கள் படிக்காமலா வள்ளுவனின் தொடங்கி பலர் எப்படி வந்தார்கள்? 63 நாயன்மார்கள் குப்பைக்கு சமமானவர்களா? கம்பன், இளங்கோ எதிரியா? கல்வியில் சிறந்தது தமிழ்நாடு, கம்பன் பிறந்த தமிழ்நாடு என பாரதி கூறுகிறார். உலகம் போற்றும் பொதுமறையை உருவாக்கிய நாங்கள் அறிவில்லாதவரா?. பாரதி, பெரியார் இருவரும் சமகாலத்தவர்கள். அம்பேத்காரையும், பெரியாரையும் எப்படி ஒப்பிட முடியும்? அண்ணல் ஆகப்பெரும் சிறந்த கல்வியாளர். நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யார் அடிமையும் இல்லை என அண்ணல் கூறினார். பெரியார் தமிழை சனியன் என்றால், தோன்றுவதை பேசி சென்றார். சனியன் தமிழ் மொழியில் தான் அவர் வாழ்நாள் முழுவதும் பேசினார். தமிழ் இனத்திற்கு எதிராக சிந்தித்தவர் பேசியவர் பெரியார் தான்.
கருத்தியல் ரீதியாக தெளிந்துவிட்டேன்:
திராவிடம் என பேசி தமிழரை ஒடுக்கிவிட்டார். இது பிரபாகரன் பிள்ளைகளின் காலம். இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர் என பெரியார் எழுதினார். இஸ்லாமியர், கிருத்துவர் எதிரி என்றால் பெயர் யார்?. கிருத்துவர், இஸ்லாமியருக்கு வழங்கிய இடஒதுக்கீடை பெரியார் எதிர்த்து பேசினார். என் மொழியே சனியன் என கூறியபோதே உங்களின் கோட்பாடு உடைந்துவிட்டது. 2008ல் தான் திராவிடன் திருடன் என தெரியவருகிறது. 60 ஆண்டுகளாக திராவிடன் திருடியது குருடனாக இருந்ததால் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது தெளிவாக இருக்கிறோம். பிரபாகரனை சந்திக்கும் முன்பு வரையிலே திராவிடர் என்ற மாயையில் நான் இருந்தேன். ஆனால், இன்று தெளிவாக இருக்கிறேன். வ.உ.சி பெரியாருக்கு தனது மகனுக்கு வேலை வேண்டி சிபாரிசு கடிதம் எழுதினார். இதனை காட்சிப்படுத்தி வைத்து இருக்கிறார்கள். உனக்கு கீழ்தான் நீ என்ற பிம்பத்தை இது உருவாக்குகிறது. பெரியார் இறக்கும் தருவாயிலும் சொத்துகளை பாதுகாக்க 26 வயது பெண்ணை பெரியார் திருமணம் செய்தார். திராவிட சித்தாந்தத்தை வெட்டிசாய்ப்பதே எங்களின் பணி. திராவிடம் குறித்து படிக்க படிக்கத்தான் திராவிடம் பேசியவர்கள் திருடர்கள் என புரிந்தது. திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பது, பெரியாரின் கருத்துக்களை எதிர்ப்பதே எனது கொள்கை" என பேசினார்.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசிய காணொளி:
ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டக் கலந்தாய்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு | வடலூர் 08-01-2025 pic.twitter.com/y7Xht0my9V
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 8, 2025