Pink Auto: பெண்களின் வாழ்க்கையில் அடுத்த ஒளிவிளக்கை ஏற்றும் தமிழக அரசு; "பிங்க் ஆட்டோ".. உடனே விண்ணப்பிங்க... விபரம் உள்ளே.!

சென்னையில்‌ வசிக்கும்‌ பெண்களின்‌ பாதுகாப்பினை உறுதி செய்திடும்‌ வகையில்‌ இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்‌ திட்டம்‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Pink Auto: பெண்களின் வாழ்க்கையில் அடுத்த ஒளிவிளக்கை ஏற்றும் தமிழக அரசு;
Pink Auto (Photo Credit: @Puthiyatalaimurai X)

அக்டோபர் 23, சென்னை (Chennai News): தமிழ்‌நாடு அரசு பெண்கள்‌ நலன்‌, பாதுகாப்பு மற்றும்‌ முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத்‌ செயல்படுத்தி வருகின்றது. பெண்களின்‌ நலனை உறுதி செய்யும்‌ விதமாக இலவச பேருந்துப் பயணத்திட்டம்‌, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகை, தோழி விடுதிகள்‌, கைம்பெண்கள்‌ மற்றும்‌ ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது, புதுமைப்பெண்‌ திட்டம்‌ போன்ற பல்வேறு புதிய மகளிர்‌ நலத்‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்பு:

இதன் வாயிலாக, பெண்களின்‌ வாழ்வாதாரம்‌ மற்றும்‌ முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது. பெண்களின்‌ பாதுகாப்பில்‌ உறுதிபூண்டு பல்வேறு புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தும் நிலையில், அதனை மேலும்‌ வலுப்படுத்தும் விதமாக தமிழ்‌நாடு முதலமைச்சர்‌ முக ஸ்டாலின் உத்தரவின்‌ பேரில்‌, புதிய முன்னெடுப்பாக "இளஞ்சிவப்பு ஆட்டோக்களை' தமிழ்‌நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ பாதுகாப்பாக பயணிக்க, பெண்‌ ஓட்டுநர்கள்‌ மூலம்‌ 250 ஆட்டோக்கள்‌ சென்னை மாநகரில்‌ இயக்கப்பட உள்ளன. Cylinder Explosion: சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. பலர் படுகாயம்..!

ஓட்டுநர்‌ உரிமம்‌ பெற்ற பெண்களுக்கு சிறப்புத் தகவல்:

அவசர காலங்களில்‌ புகார்‌ பெறப்பட்டவுடன்‌, காவல்‌ துறையின்‌ மூலம்‌ விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும்‌ நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும்‌, பெண்களின்‌ பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன்‌ இணைக்கப்பட்ட அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்‌. பெண்கள்‌ சுய தொழிலில்‌ சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும்‌, ஓட்டுநர்‌ உரிமம்‌ பெற்ற பெண்களின்‌ வாழ்வாதாரத்தை உயர்த்தவும்‌ இத்திட்டம்‌ வழிவகை செய்யும்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெற தேவையான தகுதிகள்‌:

  1. பெண்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்கலாம்‌.
  2. கைம்பெண்கள்‌ மற்றும்‌ ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.
  3. 25 வயது முதல்‌ 45 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.
  4. 10 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.
  5. ஓட்டுநர்‌ உரிமம்‌ வைத்திருக்க வேண்டும்‌.
  6. சென்னையில்‌ குடியிருக்க வேண்டும்‌

இதற்கென, சென்னையில்‌ உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம்‌ ரூபாய்‌ தமிழ்‌நாடு அரசு சார்பில் ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும்‌. ஆட்டோ வாங்க தேவைப்படும்‌ மீதி பணத்திற்காக வங்கிகளுடன்‌ இணைக்கப்படும்‌. சென்னையில்‌ உள்ள தகுதியான பெண்‌ ஓட்டுநர்கள்‌, இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர்,

8வது தளம்‌, சிங்காரவேலர்‌ மாளிகை,

சென்னை - 600 001.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 23 .11.2024

(The above story first appeared on LatestLY on Oct 23, 2024 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).