Tenkasi Shocker: அலட்சியத்தால் நடந்த சோகம்: 2 வயது பெண் குழந்தை தொட்டி நீரில் மூழ்கி பரிதாப பலி., பெற்றோர்களே கவனம் தேவை.!

வீடுகளில் இளம் வயதுள்ள சிறார்கள் இருப்பின், அவர்களை கண்ணும் - கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு. பேத்தி இங்குதான் விளையாடுவாள் என காத்திருந்த பாட்டிக்கும், வெளியே சென்று வந்த அம்மாவுக்கும் கிடைத்த அதிர்ச்சியை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

Tenkasi Shocker: அலட்சியத்தால் நடந்த சோகம்: 2 வயது பெண் குழந்தை தொட்டி நீரில் மூழ்கி பரிதாப பலி., பெற்றோர்களே கவனம் தேவை.!
Baby Death File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 01, ஆலங்குளம் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் (Alangulam), கரும்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரின் மனைவி திம்மக்காள். தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அர்த்தமாக 2 ஆண் மற்றும் 1 பெண் என 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

பாட்டியின் பராமரிப்பில் விட்டுச்செல்லப்பட்ட குழந்தைகள்: மூத்த மகனுக்கு 8 வயதும், இரண்டாவது மகள் முருகதர்ஷினிக்கு 2 வயதும், கடைக்குட்டி மகனுக்கு 6 மாதமும் வயது ஆகிறது. இவர்களின் பக்கத்து வீட்டிலேயே திம்மக்காளின் தாயாரும் வசித்து வருகிறார். திம்மக்காள் வீட்டிலேயே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். நேற்று தனது குழந்தைகளை அம்மாவின் பராமரிப்பில் விட்டுவிட்டு, பீடி சுற்றும் கடைக்கு சென்றுள்ளார். Puratchi Bharatham Katchi Supporter Killed: கஞ்சா விற்பனை குறித்து தகவல் கொடுத்த புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கொடூரமாக கொலை: கஞ்சா போதையில் மூவர் கும்பல் வெறிச்செயல்.! 

2 வயது மகள் எங்கே?: வீட்டிற்கு திரும்பி வந்த திம்மக்காள், தனது 2 வயதுடைய மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மகளை வீட்டிற்குள் தேடிவிட்டு, வெளியே வந்து பார்த்தபோது நிலத்தடியில் வீட்டின் முற்றம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த தொட்டியின் மூடி விலகிக்கிடந்ந்துள்ளது. அதிர்ச்சியுடன் தொட்டியை சென்று பார்த்தபோது, குழந்தை உள்ளே பேச்சு - மூச்சின்றி கிடந்துள்ளார்.

இறப்பை உறுதி செய்த மருத்துவர்கள்: அவரை மீட்ட திம்மக்காள், உடனடியாக அக்கம் - பக்கத்தினர் உதவியுடன் மகளை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஆலங்குளம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை: நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).