Ashok Kumar | Crime File Pic (Photo Credit: @Vignesh01717620 X / Pixabay)

நவம்பர் 01, திருத்தணி (Thiruvallur Crime News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாழவேடு, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் புரட்சி பாரதம் (Puratchi Bharatham Katchi PBK) கட்சியில் திருவாலங்காடு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வசித்து வரும் பகுதிகளில் கஞ்சா புழக்கம் காரணமாக இளைஞர்கள் தவறான வழிகளில் பயணித்ததாக தெரியவருகிறது.

மூன்று பேர் கும்பலால் பயங்கரம்: இதனால் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டி, அவ்வப்போது காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அசோக் குமார் சமத்துவபுரம் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு அருகே நின்றுள்ளார். அச்சமயம், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், சரமாரியாக அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்தது.

திரைப்பட பாணியில் சோகம்: மேலும், திரைப்படங்களில் நடக்கும் கொடூர கொலை பாணியில் கொடூரத்தை நிகழ்த்திய கும்பல், தலையை துண்டித்து அங்கிருந்து சென்றது. இந்த கொலையை நேரில் பார்த்து, அதிர்ச்சியுடன் அசோக்கை காப்பாற்ற வைத்த தேநீர்கடை உரிமையாளர் கலையரசன் என்பவரின் கைகளிலும் வெட்டு விழுந்துள்ளது. Train Derail: காலிப்பெட்டிகளுடன் தடம்புரண்ட பயணிகள் இரயில்: நல்வாய்ப்பாக காத்திருந்த அதிர்ஷ்டம்.!  

Crime File Pic (Photo Credit: Pixabay)

காவல்துறையினர் விசாரணை: இதுதொடர்பாக தகவல் அறிந்த அசோக்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர், அவரின் உடலை கண்டு கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது. கொலை சம்பவம் தொடர்பாக திருத்தணி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அசோக் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கஞ்சா போதை கும்பல்: கொலை சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சார்ந்தவர்கள் என்பது உறுதியானது. இவர்கள் எப்போதும் கஞ்சா புகைத்துவிட்டு போதையில் சுற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

காரணம் என்ன?: இதனால் கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த ஆத்திரத்தில் மூவர் கும்பலால் புரட்சி பாரதம் கட்சியின் பிரமுகர் அஷோ குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள 3 இளைஞர்களுக்கும் அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். அவர்கள் கைதாகிய பின்னரே, கொலைக்கான காரணம் தெரியவரும்.