Schoolgirl Allegedly Molested: கஞ்சா போதையில் பள்ளி மாணவியிடம் சிலுமிசம்.. அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!

சென்னையில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு கஞ்சா போதையில் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Schoolgirl Allegedly Molested: கஞ்சா போதையில் பள்ளி மாணவியிடம் சிலுமிசம்.. அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!
Sexual Harassment (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஆகஸ்ட் 09, சென்னை (Chennai News): சென்னை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த 13 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி, நேற்று காலை முல்லை நகர் வழியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, கஞ்சா போதையில் அவ்வழியாக வந்த ஒருவர், சிறுமியை வழிமறித்து, பாலியல் தொல்லை (Allegedly Molested) கொடுத்துள்ளார். பயத்தில் சிறுமி அலறியுள்ளார். 13-Year-Old Girl Performs Bharatnatyam For 3 Hours: வயநாடு நிலச்சரிவு.. தொடர்ந்து 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டிய 13 வயது சிறுமி..!

அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த நபரை பிடித்து, அடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வியாசர்பாடியை சேர்ந்த சுந்தர் (வயது 35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).