ஆகஸ்ட் 09, சென்னை (Chennai News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு (Wayanad Landslides) மாவட்டம், சூரல்மலை, அட்டமலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் அதிகமானோர் பரிதாபமாக மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரைவிட்டனர். நிலச்சரிவு ஏற்பட்டு 8 நாள்கள் கடந்த நிலையிலும் மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்ந்து வருகின்றன. தொடர்ந்து மாநில அரசுக்கு மக்கள், தொழிலதிபர்கள் நிதிஉதவி அளிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. Five Children Dies By Blast: யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்த பிஞ்சுகள்.. திடீர் வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!
இந்நிலையில், பேரிடரில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து நிற்பவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், சென்னையை சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி ஸ்ரீ, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டு வதற்காக 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். அந்த நிகழச்சியின் மூலம் கிடைத்த பணம் மற்றும் தனது சேமிப்பு பணம் ரூ.15 ஆயிரத்தை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் (Kerala CM Pinarayi Vijayan) நேரில் சந்தித்து வழங்கினார்.
A 13-year-old girl child from Tamil Nadu, Harini Sri, performed #Bharatanatyam for 3 hrs straight to raise funds for #Wayanadlandslide to #standwithwayanad. She donated ₹15,000, including her savings, to #CMDRF. pic.twitter.com/v8FmbkZ1ie
— Kerala Government | കേരള സർക്കാർ (@iprdkerala) August 8, 2024