ஜூலை 01, சென்னை (Kitchen Tips): மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு அற்புதமான வித்தியாசமான முறையில் வடை செய்து கொடுக்கலாம். அந்த வகையில் புடலங்காய் (Snake Gourd) கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் புடலங்காய் வடை செய்து சாப்பிடலாம். இந்த புடலங்காய் வடை செய்வது மிகவும் எளிது மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். செட்டிநாடு புடலங்காய் வடை (Chettinad Podalangai Vada) செய்வது எப்படி என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Family Suicide Attempt: ஆன்லைன் முதலீட்டு பணமிழப்பு; வாலிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி..!
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு - 1 கப்
பாசிப் பருப்பு - கால் கப்
வரமிளகாய் - 4
புடலங்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை நன்கு கழுவி, அதனுடன் வரமிளகாய் சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும். சுமார் 2 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ள பருப்பு மற்றும் வரமிளகாயை மிக்ஸியில் போட்டு நீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைக்க வேண்டும். Ola CEO Bhavish Aggarwal: திருமணமான பெண்களின் பணி விவகாரம்: பாக்ஸ்கான் நிறுவனம் குறித்து ஓலா கருத்து.!
பின்பு பொடியாக நறுக்கிய புடலங்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி, 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். இதனால் புடலங்காயில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, அதை மிக்ஸியில் போட்டு, இஞ்சியை சேர்த்து சிறிது நீரை ஊற்றி மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த கடலைப் பருப்பு கலவை, புடலங்காய், இஞ்சி பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றி, பிசைந்து வைத்துள்ளதை சிறிது எடுத்து வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அனைத்தையும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் புடலங்காய் வடை ரெடி.