Woman Burnt To Death: ஏரிக்கரையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
நாமக்கலில் ஏரிக்கரை பகுதியில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 26, ராசிபுரம் (Namakkal News): நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் 140 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை (Lake Shore) பகுதியில், நேற்றைய தினம் அப்பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ஏரியின் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது முள்மரங்கள் சூழ்ந்த பகுதியில், எரிந்த நிலையில் (Burnt To Death) பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இதுகுறித்து ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். Minor Girl Rape: துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமி பலாத்காரம்; மாடியில் இருந்து தள்ளிவிட்டு, தப்பியோடிய மர்ம நபர்..!
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில், எரித்து கொலை செய்யப்பட்ட பெண் வடுகமுனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவரின் மனைவி மணிமேகலை (வயது 25) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு, மணிமேகலைக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த அவரது கணவர் ரமேஷ், நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேசி, கணவருடன் சேர்ந்து வாழும்படி, மணிமேகலைக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மணிமேகலை மீண்டும் மாயமாகியுள்ளார். இந்நிலையில், நேற்று ஏரியில் பெண் சடலம் கிடப்பதாக தகவல் பரவியதால் சந்தேகமடைந்த ரமேஷ், அங்கு சென்று பார்த்தபோது, அது மணிமேகலை என்பது உறுதியானது. மேலும், மணிமேகலையின் செல்போனை கைப்பற்றி, அதில் அவருடன் பேசிய வாலிபர் ஒருவரை பிடித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

