வானிலை: தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி; நாளைய வானிலை என்ன? வானிலை அறிவிப்பு இதோ.!
தமிழகத்தில் நாளை (டிச.12) 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
டிசம்பர் 11, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.11ம் தேதி) காலை 8.30 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இன்றைய வானிலை (Today Weather):
இதன்காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழையும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. Face Massage Machine: தினமும் முகத்திற்கு மசாஜ் செய்ய போறீங்களா? அப்போ இந்த கருவிகளை வாங்கிக்கோங்க..!
நாளைய வானிலை (Tomorrow Weather):
நாளை (டிச.12) தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே அடுத்த ஐந்து நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புயலின் நகர்வுகளை நேரலையில் காண:
(The above story first appeared on LatestLY on Dec 11, 2024 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

