டிசம்பர் 11, சென்னை (Technology News): தினமும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி முகத்திற்கு மசாஜ் செய்வது என்பது மிகக் கடினமான விஷயம்தான். அதனால் தான் குறைந்த நேரத்தில் சுலபமாக ஃபேஸ் மசாஜ் செய்வதற்காக சில கருவிகள் உள்ளது.
அதில் தினமும் உபயோகிக்க எளிமையான சில கருவிகள் உங்களுக்காக:
குவா ஷா:
இது சிறிய வளைவுடன் பட்டை வடிவத்தில் இருக்கும் கருவியாகும். இது பெரும்பாலும் கூழாங்கற்கலால் தயாரிக்கப்படுபவை. இது தாடை மற்றும் கன்னத்தில் வடிவத்தை கொடுப்பதற்குப் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தும் போது முகத்தசையில் சீரான அழுத்தத்தை தருவதால் கொழுப்பு சேராமல் இரட்டை தாடையை தவிர்த்து அழகிய வடிவத்தை தருகிறது. மேலும் தசைகள் தளர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது. சீனாவின் பழங்கால அழகுக் கலையில் இது முக்கிய பங்கு வகித்தது. Gold Silver Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு; சவரன் ரூ.58,280/- க்கு விற்பனை.!
ஜேட் ரோலர்:
அழுத்தமான முக சருமத்தை ரிலாக்ஸ் செய்ய இது பயன்படுத்தப்படுகிறது. ஜேட் ரோலர் ஒரு புறம், முகத்தில் பயன்படுத்தக் கூடிய பெரிய ரோலரையும் மறுபுறம் கண்களுக்குக் கீழ் மென்மையான பகுதிகளுக்கு பயன்படுத்தக்கூடிய சிறிய ரோலரையும் கொண்டது. முகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி முகசருமத்திற்கு அமைதியையளிக்கிறது. மேலும் இது முகத்தில் கொழுப்பு தங்கவிடாது.
ஐஸ் குலோப்ஸ்:
இது இரண்டு கண்ணாடிக் குடுவையில் நீர் நிரப்பியது போன்று இருக்கும். இந்த ஐஸ் குலோப்ஸ் சிவப்புத்திட்டுக்களைக் குறைக்கிறது. முகத்தின் முடிகளை அகற்றியபின் இதைப் பயன்படுத்துவதால் முகசருமத்தை இயற்கையாக பொலிவாக்குகிறது. மேலும் மேக்கப்பை செட் செய்ய உதவுகிறது. இதை உபயோகப்படுத்துவதற்கு முன் சிறிது நேரம் ஃபிரீசரில் வைத்துப்பயன்படுத்த வேண்டும். மேலும் இது தலைவலி, முகவீக்கம் மைக்கரைன் போன்றவற்றை நீக்குகிறது.
வீல் ஃபேஸ் ரோலர்:
ஒரு கைப்புடியுடன் ஒரு சிறிய உருளைகளைக் கொண்ட இது சில்வர், மரம் போன்றவற்றில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது லேசான அழுத்தத்துடன் முகத்தில் இரத்தவோட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்களுடன் முகம் பொலிவடையும். மேலும் முகம் இளமையான வடிவத்துடனே இருக்கும்.
அடிக்கடி முகத்தைக் கைகளால் தொடக்கூடாது. வெறும் கைகளால் தொடுவதால் கைகளிலுள்ள பாக்டீரியாக்கள் முகத்தில்சேர்ந்து தோல் வேகமாக சுருங்க ஆரம்பித்துவிடும்.