Heatwave (Photo Credit: pixabay)

மார்ச் 09, சென்னை (Weather News): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

09.03.2024 முதல் 15.03.2024 வரை; தமிழகம் , காரைக்கால்  மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

09.03.2024 முதல் 11.03.2024 வரை; தமிழகத்தில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் ஓரிரு இடங்களில் அதிகமாக இருக்கக்கூடும். மேலும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியமாக உணரலாம். Night Shows Cancelled In Theatres: இரவுக்காட்சிகள் ரத்து – திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..!

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.