மார்ச் 09, சென்னை (Cinema News): தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் கூட்டம் இன்றி காணப்படுகிறது. சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் தற்போது வெளியாகாத நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாளை இரவுக்காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Poisonous Fish: தப்பி தவிர கூட இந்த மீன்களை சாப்பிடாதீங்க – மருத்துவர்கள் எச்சரிக்கை..!
சமீபத்தில் வெளியான மலையாளத் திரைப்படங்களான ‘பிரமயுகம்’, ‘பிரேமலு’, மற்றும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றன. மேலும், இத்திரைப்படங்களினால் ரசிகர்களின் வருகை அதிகமாக இருந்த நிலையில், திரையரங்குகளின் உரிமையாளர்கள் சற்று நிம்மதியடைந்தனர். தற்போது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐ.பி.எல். (IPL) தொடர் ஆரம்பிக்க இருப்பதால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் குறையத்தொடங்கும். தமிழ் சினிமாவில் தற்போது எந்த திரைப்படங்களும் வெளிவராத நிலையில், ஒரு நல்ல திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
தமிழில் வரவிருக்கும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களான கமல் நடிக்கும் ‘இந்தியன்-2’, ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, விஜய் நடிக்கும் ‘கோட்’, சூர்யாவின் ‘கங்குவா’ உள்ளிட்ட படங்கள் இந்தக் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.