வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் சில நாட்களுக்கு, தமிழ்நாட்டில் மாநில அளவில் பரவலான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 02, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், வடகடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இதர மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், விருத்தாச்சலம், கொத்தவாச்சேரி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ஷமாக சமவெளிப்பகுதிகளில் கரூர் பரமத்தியில் 36.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 02-02-2025 இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதயிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். Anand Srinivasan: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு.. யாருக்கு சாதகம்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
03-02-2025 நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 04-02-2025 முதல் 08-02-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
இன்று (02-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 -23 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (03-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Aug 17, 8709 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

