Anand Srinivasan | Income Tax Logo | Nirmala Sitharaman (Photo Credit: YouTube / Wikipedia / @ANI X)

பிப்ரவரி 01, சென்னை (Chennai News): இந்திய நாடாளுமன்றத்தில் இன்று 2025 - 2026 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தொடர்ந்து 8 வது பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அதிகபட்சமாக ரூ.4,91,732 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டது. கணக்கில் காண்பிக்கப்படாத கிரிப்டோ கரன்சியை சேர்த்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வருவாய் தொடர்பான விஷயங்கள் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்திய மக்கள் முக்கியமாக எதிர்பார்த்த தனிநபர் வருமான உச்ச வரம்பு ரூ.12 இலட்சமாக உயர்த்தப்பட்டது. Budget 2025: பட்ஜெட் 2025 அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.! 

தனிநபர் வருமான வரி (Personal Income Tax):

அதன்படி, முன்னதாக வருமான வரி உச்சவரம்பு ரூ.7 இலட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.12 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதம் வருமானம் (New TDS Tax in Tamil) ரூ.1 இலட்சம் வரை பெரும் நபர்கள் பயன் அடைவார்கள். ஒரு ஆண்டுக்கு ரூ.12 இலட்சம் வருமானம் பெறுவோர், ரூ.80,000 வரை வரிச்சலுகையை பெறுவார்கள். ரூ.4 இலட்சம் வரை வரி இல்லை, ரூ.4 இலட்சம் முதல் ரூ.8 இலட்சம் வரை 5 % வரி, ரூ.8 இலட்சம் முதல் ரூ.12 இலட்சம் வரை 10 %, ரூ.12 இலட்சம் முதல் ரூ.16 இலட்சம் வரை 15 % வரி, ரூ.16 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை ரூ.20 % வரி, ரூ.20 முதல் ரூ.24 இலட்சம் வரை 25 % வரி, ரூ.25 இலட்சத்திற்கு மேல் 30 % வரி பிடித்தம் செய்யப்படும். இதில் ரூ.12 இலட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் பெறுவோரின் சம்பளத்தில் டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, உரிய கணக்கு தாக்கம் செய்யப்பட்ட பின் அவை மீண்டும் திரும்ப வழங்கப்படும். இதனால் அதிகபட்சம் ரூ.12 இலட்சம் வரை சம்பளம் வாங்குவோரின் தொகை திரும்ப வழங்கப்பட்டு, அவர்களுக்கு வரிச்சலுகை உறுதி செய்யப்படும்.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் (Anand Srinivasan on Budget 2025) விமர்சனம்:

தனிநபர் வருமான வரி தொடர்பாக பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேசுகையில், "ரூ.12 இலட்சம் வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு வருமான வரி இல்லை என்று கூறியுள்ளார்கள். சாதரணமாக ரூ.4 இலட்சம் வரை வருமான வரி பிடித்தம் கிடையாது. பிறருக்கு டிடிஎஸ் முறையில் பிடிக்கப்படும் தொகை திரும்ப வழங்கப்படும். புதிய வருமான வரி மட்டுமே இனி செல்லுபடியாகும். இந்தியாவில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், அவர்களில் 7000 கோடி பேர் மட்டுமே வருமான வரி பதிவு செய்து, அவர்களில் 2 கோடி நபர்கள் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இவர்களில் 1 கோடி நபர்கள் தான் ரூ.1 இலட்சத்திற்கும் அதிகம் சம்பாத்தியம் செய்கின்றனர். இந்த பட்ஜெட் 2 கோடி பேருக்கு மட்டுமே. 2 கோடி சம்பாத்தியம் செய்பவருக்கு ரூ.30000 வரை வரி சலுகை கொடுத்துள்ளனர், அதிகம் சம்பாதிப்போருக்கு ரூ.1 இலட்சம் சலுகை கொடுத்துள்ளனர். அதிகம் சம்பாத்தியம் செய்யும் நபர்களுக்கு வரி சலுகை என அறிவித்துவிட்டு, எஞ்சியுள்ள 138 கோடி மக்களுக்கு அரசு கொடுத்தது என்ன?. என்னைப்போன்ற நபர்களுக்கு வரிச்சலுகை கொடுத்ததற்கு பதில், ஏழை-எளிய மக்களுக்காக பெட்ரோல்-டீசல் விலையை, அதன் வரியை குறைத்து அறிவித்து இருக்கலாம். வருமானம் பார்த்த நபர்களுக்கு ரூ.1 இலட்சம் கோடியை சலுகையாக கொடுத்ததற்கு, ஏழை-எளிய மக்களுக்காக பிரித்து கொடுத்து வைத்திருக்கலாம். எங்களிடம் பணத்தை கொடுத்தால் நாங்கள் பத்திரமாக அதனை வங்கியில் தான் வைத்திருப்போம்.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த காணொளி:

வீடியோ நன்றி: சன் தொலைக்காட்சி