வானிலை: அடுத்த ஒரு வாரம் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இன்று முதல் வரும் 09ம் தேதி வரையில், தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
பிப்ரவரி 03, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் லேசான மழை பெய்துள்ளது. இதர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோட்டில் அதிகபட்சமாக பகலில் 36.0 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. DMK Protest: "பட்ஜெட்டில் ஓரவஞ்சனை" - மத்திய அரசுக்கு எதிராக திமுக பொதுக்கூட்டம்.. அறிவிப்பு.!
இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், 03-02-2025 மற்றும் 04-02-2025 ஆகிய தேதிகள் வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 05-02-2025 முதல் 09-02-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை (Chennai Weather) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):
இன்று (03-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (04-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22” செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Feb 03, 2025 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

