Weather Update Today: 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து கொளுத்தும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update Today: 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து கொளுத்தும் வெயில் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Heat Wave (Photo Credit: Pixabay)

மார்ச் 23, சென்னை (Weather News): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் எனவும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 29-ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Amy Jackson Engagement Party: நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்த விழா..! – புகைப்படங்கள் வைரல்..!

இன்று முதல் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். மேலும், இரண்டு நாட்களுக்கு அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஏற்படும் போது ஓரிரு இடங்களில் அசௌகரியமாக உணரலாம்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சமாக வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 06:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).