TN Weather Report: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

TN Weather Report: அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Sun (Photo Credit: Pixabay)

மே 1, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° - 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 42.5° செல்சியஸ், ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3° செல்சியஸ், சேலத்தில் 40.8° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 40.6° செல்சியஸ், தர்மபுரி, மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1° செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° - 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°- 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.4° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9° செல்சியஸ் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Explosion At Stone Quarry: கல்குவாரியில் வெடி விபத்து.. வெடித்து சிதறிய உடல்கள்.. வெளியான சிசிடிவி வீடியோ..!

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை நிலவக்கூடும். மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும், அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 01, 2024 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).