வானிலை: 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.. என்று தெரியுமா? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தென்மாவட்ட பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களில் கனமழைக்கான முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய வானிலை, நாளைய வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படிக்கவும்.
ஜனவரி 28, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், சமவெளிப்பகுதிகளில், ஈரோடு மாவட்டத்தில் அதிகபாசமாக 33.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், 28-01-2025 மற்றும் 29-01-2025 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 30-01-2025 அன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Rowdy Killed: பட்டப்பகலில் கோவில் வளாகத்தில் பயங்கரம்; ரௌடி 6 பேர் கும்பலால் கொடூர கொலை.. ஸ்ரீரங்கத்தில் பேரதிர்ச்சி.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
31-01-2025 அன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 01-02-2025 அன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்யக்கூடும். 02-02-2025 மற்றும் 03-02-2025 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai Weather Today) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):
இன்று (28-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22” செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நாளை (29-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
28-01-2025 அன்று தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

