Girl Sexual Abuse (Photo Credit: Pixabay)

மே 23, குளச்சல் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகே உள்ள மீனவ கிராமத்தில் 42 வயது மீனவர், அவரது மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் குளச்சலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, கோடை விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். Health Effects Of Eating Temple Prasad: கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு நேர்ந்த சோகம்..! 5 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

இந்நிலையில், சிறுமியின் தாய் அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமியின் அண்ணன் தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். தனியாக இருந்த தனது மகளுக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்துள்ளார். இதேபோல், மற்றொரு நாளும் இவ்வாறு நடந்துகொள்கையில், வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இதுதொடர்பாக குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், சிறுமியின் தந்தை மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, சிறுமியின் தந்தை தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். தான் பெற்ற மகளுக்கு அவரது தந்தையே பாலியல் தொந்தரவு அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.