Bus Driver Death: ஓட்டுநர் தலை நசுங்கி சாவு; அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த சூழலில் நேர்ந்த சோகம்..!
கோயம்புத்தூரில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 10, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி காட்டூர் வீதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 25) என்பவர், தனியார் பேருந்து ஓட்டுநராக (Bus Driver) பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டு, இரவு 9.30 மணியளவில் பேரூர்-சிறுவாணி சாலை பச்சாப்பாளையம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார். TN SSLC Results 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!
அப்போது, அங்கு கருப்பசாமி தான் ஓட்டி வந்த பேருந்தின் கீழே இரவு பாய் விரித்து உறங்கியுள்ளார். இதனையடுத்து, நேற்று காலை பிற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் எழுந்து, வேலைக்கு தயாராகியுள்ளனர். கருப்பசாமி ஓட்டும் பேருந்தை இயக்க நேற்று அதிகாலை மற்றொரு ஓட்டுநர் சூர்யா அங்கு வந்துள்ளார். இந்நிலையில், ஓட்டுநர் சூர்யா பேருந்தின் கீழே கருப்பசாமி உறங்கிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் பேருந்தை இயக்கியுள்ளார். இதில், கருப்பசாமி பேருந்து சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பாக, பேரூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, ஓட்டுநர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கருப்பசாமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தற்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 10, 2024 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

