Son Stabbed To Death: குடிபோதையில் தகராறு செய்துவந்த மூத்த மகனை, தந்தை மற்றும் இளைய மகன் சேர்ந்து கொடூர கொலை..!
சென்னையில் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த தனது மூத்த மகனை, தனது இளைய மகனுடன் சேர்ந்து அவரது தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 24, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி (வயது 60). இவரது மூத்த மகன் விஜய் (வயது 35), இளைய மகன் அஜய் (வயது 26). மூத்த மகன் விஜய்க்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, ஒரே மாதத்தில் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாகி (Drug Addict) வீட்டில் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். Earthquake On The Island Of Vanuatu: வனுவாட்டு தீவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு..!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விஜய் வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். பின்னர், அவர் தனது தந்தை மற்றும் தம்பியுடன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து விஜய்யை கட்டையால் அடித்து, பின் கத்தியால் குத்திக் கொலை (Stabbing To Death) செய்துள்ளனர். இதையடுத்து, நேற்று மதியம் அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல், செட்டியார் அகரம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து எரித்து விட்டனர்.
இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர், அங்கு எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், விஜய்யை கொலை செய்த அவரது தந்தை ஆசைமணி மற்றும் இளைய மகன் அஜய் ஆகியோரை கைது செய்து அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

