ஜூன் 24, வனுவாட்டு (World News): பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இது ஓல்ரி துறைமுகத்தில் இருந்து சுமார் 51 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 156.7 மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் (Richter Scale) 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Pachai Pattani Benefits: பச்சை பட்டாணியில் உள்ள பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் தீவு முழுவதும் அதிர்ந்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரை எந்தவித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. பாதிப்பு குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பசிபிக் தீவுகளான பிஜி, டோங்கா மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகள் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.