மயோனைஸ் விற்பனைக்கு அதிரடி தடை.. அரசு கூறும் காரணங்கள் என்ன? விபரம் இதோ..!

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மயோனைஸ் விற்பனைக்கு அதிரடி தடை.. அரசு கூறும் காரணங்கள் என்ன? விபரம் இதோ..!
Mayonnaise (Photo Credit: YouTube)

ஏப்ரல் 24, சென்னை (Chennai News): வறுத்த கறி, பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைடு ரைஸ் உள்ளிட்டவைகளுக்கு சைடிஸ் ஆக மயோனைஸ் (Mayonnaise) பயன்படுத்தப்படுகிறது. இது வெள்ளை நிறத்தில் ஐஸ்கிரீம் போல் இருக்கும். இனிப்பு மற்றும் உப்பு சுவை கலந்து இருக்கும். இவற்றை பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முறையற்ற வகையில் மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. TN Govt Job: தமிழ்நாடு அரசு வேலை; இன்றே கடைசி நாள்.. உடனே விண்ணப்பிங்க..!

மயோனைஸுக்கு தடை:

இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006இன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, பொதுமக்கள் நலன் கருதி தமிழகத்தில் மயோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது மற்றும் விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழக அரசிதழில், ஏப்ரல் 8ஆம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இத்தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).