Anganwadi (Photo Credit: @Anbil_Mahesh X)

ஏப்ரல் 23, சென்னை (Chennai News): தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் (Integrated Child Development Services) துறையின் கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பணியமர்த்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Ariyalur News: பிறந்த குழந்தையை கொன்று, குப்பையில் போட்டு எரித்த கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

அங்கன்வாடி பணியாளர்:

சம்பளம்: மாதம் ரூ.7,700 - 24,200 வரை.

காலிப்பணியிடங்கள்: 3,886

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

குறு அங்கன்வாடி பணியாளர்:

சம்பளம்: மாதம் ரூ.5,700 - 18,000 வரை.

காலிப்பணியிடங்கள்: 305

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர்:

சம்பளம்: மாதம் ரூ.4,100 - 12,500 வரை.

காலிப்பணியிடங்கள்: 3,592

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்பு: பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

அங்கன்வாடி மையங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் குழந்தைகள் நலத்திட்ட வளர்ச்சி அலுவலகங்களில் இன்று (ஏப்ரல் 23) மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என குழந்தை வளர்ச்சி பணிகள் துறை அறிவித்துள்ளது.