Baby Death - File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 22, செந்துறை (Ariyalur News): அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி ராஜா-சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும், கிருத்திகா என்ற 1 வயது மகளும் இருந்தனர். மனைவி கர்ப்பமாக இருந்த காலத்தில் ராஜா சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி அன்று தனது இரு குழந்தைகளையும் வீட்டில் விட்டுவிட்டு, அருகில் உள்ள பால் பண்ணைக்கு சந்தியா சென்றுள்ளார். Lawyer Cheated Young Woman: விவாகரத்து பெறுவதற்காக வழக்கறிஞரை சந்தித்த இளம்பெண்; அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்..!

பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது மகள் கிருத்திகா வாயில் மண்ணோடு, சுய நினைவில்லாமல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே மகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக (Child Murder) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சந்தியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவரது மாமியார் மீது சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், அவரது மாமியார் விருத்தம்பாளை அழைத்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில், பேரன் மட்டும் தான் என் மகன் மூலம் பிறந்தான் எனவும், பேத்தி வேறொருவருக்கு பிறந்ததாகவும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், சந்தியா வெளியே சென்ற நேரத்தில் பேரனும், பேத்தியும் விளையாடிக்கொன்றுள்ளனர். அப்போது, குழந்தை பேரனின் வாயில் மண்ணை அள்ளி போடுவதை கண்டு ஆத்திரமடைந்த பாட்டி, குழந்தையின் வாயில் மண்ணை அள்ளி போட்டுக் கொன்றுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாட்டி விருத்தாம்பாளை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.