Husband Dies By Suicide: மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் குழந்தையை கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை.. உறவினர்கள் சோகம்..!
சென்னையில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், தனது 5 வயது மகளை கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 16, பூந்தமல்லி (Chennai News): சென்னையில் உள்ள பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் வாணியர் தெரு பகுதியைச் சேர்ந்த தம்பதி மோகன் (வயது 32)-பரிமளா (வயது 28). இத்தம்பதிக்கு நட்சத்திரா (வயது 5) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து மோகனும், அவரது மகளும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பூந்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தந்தை, மகள் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். Paneer Halwa Recipe: தித்திக்கும் சுவையில் பன்னீர் அல்வா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
இதனையடுத்து, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர், இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், மோகனின் மனைவி பரிமளா தனது மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று அந்த இடத்திற்குச் சென்ற மோகன், தனது மனைவியுடன் சண்டை போட்டு மகளை தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த மோகன், தனது மனைவி வேறொருவருடன் சென்றுவிட்டதை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் தன் குழந்தைக்கு விஷம் (Poison) கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டிருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பூந்தமல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

