Paneer Halwa (Photo Credit: YouTube)

ஜூலை 16, சென்னை (Kitchen Tips): அல்வா என்று சொன்னால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. இந்தியர்களுக்கு அல்வா என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும். அந்தவகையில் பன்னீரை பயன்படுத்தி எப்படி அல்வா செய்வது என்பதை இதில் பார்ப்போம். இந்த பன்னீர் அல்வா (Paneer Halwa) புரதச்சத்து நிறைந்ததாய் இருக்கும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பர். அவற்றை எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 1 கப்

பால், சர்க்கரை - அரை கப்

ஏலக்காய் பொடி - 1 கப்

நெய் - 1 தேக்கரண்டி

முழு பாதாம் பருப்பு - 8

நறுக்கிய பாதம் துண்டுகள் - 1 தேக்கரண்டி. Serial Killer Arrest: 42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த சீரியல் கில்லர்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. கென்யாவில் பயங்கரம்..!

செய்முறை:

முதலில் பன்னீரை எடுத்து அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி பிசைந்து கொள்ளவும். அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும், அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும். நெய் உருகியதும் அதில் அரைத்து வைத்த பன்னீரை சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வறுக்கவும். பன்னீர் பொன்னிறமாக மாறியவுடன் அதில் பால் சேர்த்து, நன்றாக சுண்டி வரும் போது தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறிவிடவும்.

பின்னர், கடாயை மூடி 5 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். பால் முழுவதுமாக வற்றி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து அதில் ஏலக்காய் தூள், நறுக்கி வைத்த பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பிறகு இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு பன்னீர் அல்வாவை கிண்ணங்களில் சேர்த்து அதன் மீது முழு பாதாம் பருப்பு வைத்து கார்னிஷ் செய்து பரிமாறவும். அவ்வளவுதான் தித்திக்கும் சுவையில் பன்னீர் அல்வா ரெடி.