School Student Commits Suicide: எப்போதும் ரீல்ஸ்.. தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!

தாய் கண்டித்ததால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

School Student Commits Suicide: எப்போதும் ரீல்ஸ்.. தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!
Suicide File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 06, சென்னை (Chennai): சென்னை மதுரவாயல் இந்திராகாந்தி தெருவில், அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி இருந்து வந்துள்ளார். இவரது தாய் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் தம்பியுடன் மாணவி வீட்டில் படித்துக்கொண்டிருந்தார். இரவு மாணவியின் தாய் வேலை முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். வந்தது முதல் மாணவி வெளியே வரவே இல்லை. மாணவியின் அறை நீண்ட நேரமாக சாத்தியிருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாணவி தற்கொலை (Commits Suicide) செய்து கொண்டது தெரியவந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Plane Crash in Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் விமான விபத்து.. பெண் விமானி காயம்..!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாணவி படிக்காமல், செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால், தாய் மகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).