Suicide By Jumping In Front Of A Train: இரயில் முன்பாய்ந்து பறிபோன 5 உயிர்கள்: குழந்தைகளின் கண்களை கட்டி தாய்-மகள்களின் விபரீத முடிவு.! தஞ்சாவூரில் சோகம்.!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suicide By Jumping In Front Of A Train: இரயில் முன்பாய்ந்து பறிபோன 5 உயிர்கள்: குழந்தைகளின் கண்களை கட்டி தாய்-மகள்களின் விபரீத முடிவு.! தஞ்சாவூரில் சோகம்.!
Suicide By Jumping In Front Of A Train (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, தஞ்சாவூர் (Thanjavur): கும்பகோணம் (Kumbakonam) அருகே சுந்தர பெருமாள் கோயில் உத்தாணி ரயில்வே கேட் குடமுரட்டி ஆற்றுப்பாலம் அருகில் நேற்று மாலை, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. அதில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தன், 11 வயது மற்றும் 7 வயது மதிக்கத்தக்க இரு பெண் குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மூவரது உடல்களையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து உடற்கூராய்விற்காக, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். TN Assembly Session 2024: இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடக்கம்.. தமிழக அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

மேலும் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் (Thiruvidaimarudur) கட்டளைத் தெருவைச் சேர்ந்த ரேவதி(50) மற்றும் அவரது மகள் மகேஸ்வரி(30) இருவரும், மயிலாடுதுறையில் இருந்து மைசூருக்கு சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். ஒரே நாளில் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).