TN Assembly Session (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 12, சென்னை (Chennai): இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் (TN Assembly Session) ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. அப்போது 'அனைவருக்கும் வணக்கம்' என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி (R. N. Ravi). மேலும் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,​​"உரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் முரண் படுகிறேன். சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை பேரவை தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். அந்த வேண்டுகோள் பலமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. எனவே எனது உரையை முடிக்கிறேன். இந்த இல்லமானது மக்களின் நலனுக்காக பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான விவாதமாக இருக்க வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்." என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை 4 நிமிடத்திலேயே முடித்துக் கொண்டார். Happy Hug Day 2024: அரவணைப்பு நாள்.. கட்டிப்பிடி வைத்தியத்தால் அதிகரிக்கும் காதல் ஹார்மோன்..!

அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்த நிலையில், ஆளுநர் உரைக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு படித்தார். கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு செய்துள்ளது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.