Petrol Bomb Attack: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி ஓடிய மர்ம நபர்கள்.. சேலத்தில் பரபரப்பு..!

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Petrol Bomb Attack: காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி ஓடிய மர்ம நபர்கள்.. சேலத்தில் பரபரப்பு..!
Petrol Bomb Explosion (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 06, சேலம் (Salem News): சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் அருகே எடப்பாடி ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் (Edappadi Police Station) செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடித்து சிதறியது. அப்பொருள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த காவல் துறையினர் வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் சிலர் காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். Collector Warning Towards Parents: குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியினர் அலுவலகத்திற்கு வந்த பெற்றோர்கள்.. கண்டித்த மாவட்ட ஆட்சியர்..!

தொடர்ந்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தடவியல் நிபுணர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் எடப்பாடி காவல் நிலையத்திற்கு வருகை புரிந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல்துறையினர், பெட்ரோல் குண்டு (Petrol Bomb) வீசிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).