ஆகஸ்ட் 06, தஞ்சை (Thanjavur News): தஞ்சை மாவட்டம் வடுகம் புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மலையேறிப்பட்டி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தங்கள் கிராமத்தில் இருந்து பள்ளியிருக்கும் மனையேறிப் பட்டிக்கு பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் இருப்பதாக கூறி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். Pamban Railway Bridge: பாம்பன் புதிய பாலம்.. ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி..!
அப்போது, பள்ளி சீருடைகள் மற்றும் காலணி அணியாமல் வந்த மாணவ மாணவியரை பார்த்ததும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் (District Pankajam) கோபமடைந்து, "எந்த ஒரு கண்ணா? ஏன் ஸ்கூல விட்டுட்டு இங்க வந்து இருக்கீங்க? யார் உங்களை கூட்டிட்டு வந்தது?" என கேட்டார். மேலும் குழந்தைகள் படிப்பை கெடுத்துவிட்டு கூட்டிட்டு வருவீங்களா? என பெற்றோரிடம் கடிந்து கொண்டார். செய்திகளில் டிவிகளில் வரவேண்டும் என்பதற்காக பிள்ளைகளை அழைத்து வந்தது தவறு என்ற கலெக்டர், "குட்டி பசங்களா இவங்க கூப்பிடுறாங்க அப்படின்னு, ஸ்கூல் கட் பண்ணிட்டு வரக்கூடாது. உங்கள் வேலை படிக்கிறது மட்டும்தான்" என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.