Tuition Teacher Raped Student: 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை; சிவகாசியில் அதிரவைக்கும் சம்பவம்.!

சிவகாசி அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tuition Teacher Raped Student: 10ம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை; சிவகாசியில் அதிரவைக்கும் சம்பவம்.!
Minor Boy Sad | Harassment (Photo Credit: Pixabay)

ஜூலை 26, சிவகாசி (Sivakasi News): விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 24). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அப்போது அருகில் உள்ள பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் படிக்க வந்துள்ளார். Woman Burnt To Death: ஏரிக்கரையில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

அந்த பள்ளி மாணவனுக்கும், பவித்ராவிற்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவருடன், ஆசிரியை அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். தொடர்ந்து சிறுவனுடன் சேர்ந்து தலைமறைவாகியுள்ளார். மாணவன் காணாததையடுத்து மாணவனின் தந்தை, இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிந்து ஆசிரியை பவித்ராவை கண்டுபிடித்து கைது செய்தனர். இதையடுத்து சிறுவனுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பெண் அல்லது ஆண் எந்த குழந்தைகளாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளை பெற்றோர் கண்காணிப்பது, இவ்வாறான துயரத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற உதவி செய்யும்.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).