Two Boys Found Dead: நரபலி கொடுக்கப்பட்ட 2 மகன்கள்? வேலூரில் படுபயங்கரம்.. பதறவைக்கும் சம்பவம்.!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சிறுவர்கள் இருவர் கோவில் அருகே மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two Boys Found Dead: நரபலி கொடுக்கப்பட்ட 2 மகன்கள்? வேலூரில் படுபயங்கரம்.. பதறவைக்கும் சம்பவம்.!
Two Boys Found Dead (Photo Credit: @backiya28 X)

செப்டம்பர் 20, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மகன்கள் யோகித் (5), தர்ஷன் (4). இவர் நண்பர் கட்டிட ஒப்பந்ததாரரான வசந்த குமார். இவர் நேற்று மாலை யோகராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது யோகராஜின் மனைவியிடம் பேசிய வசந்தகுமார், அவர்களின் 6 மற்றும் 4 வயது குழந்தைகளை தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், பயத்தில் யோகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Minor Girl Pregnant: 17 வயது சிறுமி கர்ப்பம்.. காதலன் போக்சோவில் கைது..!

தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்குள்ள அனைத்து பகுதிகளிலும் சிறுவர்களை தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகே சிறுவர்கள் இருவரும் கொடூரமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த காவல் துறையினர் சிறுவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வசந்தக்குமாரையும் தேடி கைது செய்தனர்.

வசந்தக்குமாரிடம் யோகராஜ் 14 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை திரும்ப தருவதில் ஏற்பட்ட பிரச்சினையால் யோகராஜின் குழந்தைகளை வசந்தக்குமார் கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. அதே சமயம், கோயில் அருகே சிறுவர்கள் இறந்து கிடந்ததால், நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Sep 20, 2024 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).