வானிலை: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Tomorrow weather (Photo Credit: LatestLY)

வானிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (20-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை (Weather):

வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். Nagarcoil News: பரிகாரம் பலிக்காததால் ஆத்திரம்; ஜோதிடரை முகநூல் நண்பரை வைத்து தீர்த்துக்கட்டிய பெண்மணி.!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு (Chennai Weather Today):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (20-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 20, 2025 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).