Kanyakumari Astrologer Murder Case (Photo Credit: @jothi623667 X / Pixabay)

ஜனவரி 20, ஆசாரிபள்ளம் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari), நாகர்கோவில் (Nagarcoil), பெருவிளை, கோட்டாவினை பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஸ்டீபன். இவர் ஜோதிடர் ஆவார். நாட்டு வைத்தியமும் பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 8ம் தேதி வீட்டில் இருந்தவர் (Astrologer Killed), சடலமாக மீட்கப்பட்டார். உடலில் காயமும் இருந்தன. இதனால் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலை உறுதி:

தகவல் அறிந்து வந்த ஆசாரிபள்ளம் காவல்துறையினர், ஜான் ஸ்டீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். பிரேத பரிசோதனையில் கொலை சம்பவம் உறுதி செய்யப்பட்டது. Avadi Double Murder: 6 பேர் கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட அண்ணன் - தம்பிகள்.. ஆவடியில் பயங்கரம்.!

இருவர் கைது:

கொலை தொடர்பாக மாங்கோடு கிராமத்தில் வசித்து வந்த கலையரசி (வயது 43) என்ற நபர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு வந்தார். அப்போது கொலைக்கான அதிர்ச்சி காரணம் தெரியவந்தது. அவருடன் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, முகநூல் நண்பரான திருநெல்வேலி, கருவேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (வயது 25) கைது செய்யப்பட்டார்.

ஜோதிடம் பலிக்காததால் கொடூரம்:

அதாவது, கொலை செய்யப்பட்ட ஜான் ஸ்டீபனிடம், ஜோதிடம் பார்க்கச் சென்ற கலையரசி, பரிகாரத்திற்கு என ரூ.9.5 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். பரிகாரம் செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ இயலவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கலையரசி பணத்தை கேட்டபோது, இருவருக்கும் தகராறு உண்டாகி இருக்கிறது.

சண்டையில் கூலிப்படை ஏவி கொலை செய்யலாம் என முடிவெடுத்த பெண்மணி, முகநூலில் பழக்கமான நம்பிராஜனை வைத்து கொலையை அரங்கேற்றி இருக்கிறார். வாக்குமூலத்திற்கு பின்னர் கொலை சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.