Tomorrow Weather (Photo Credit: LatestLY)

ஏப்ரல் 28, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தில்‌ மயிலாடுதுறையில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை. எனினும், ஒருசில இடங்களில் சற்று குறைந்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-40 டிகிரி செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36 டிகிரி செல்சியஸ், தென் தமிழக கடலோர பகுதிகளில் 34-35 டிகிரி செல்சியஸ், மலைப் பகுதிகளில் 20-28 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. TN Govt Announcement: தமிழக அரசு ஊழியர்களுக்கு தித்திப்பு செய்தி.. என்னென்ன அறிவிப்பு? முழு விபரம் இதோ..!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இன்று (28-04-2025) மற்றும் நாளை (29-04-2025), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-04-2025 முதல் 03-05-2025 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04-05-2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

28-04-2025 மற்றும் 29-04-2025, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

30-04-2025 முதல் 02-05-2025 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

28-04-2025 முதல் 02-05-2025 வரை, அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (28-04-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

நாளை (29-04-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.