Woman Raped By Preacher: பரிகாரம் செய்வதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; சாமியார் தலைமறைவு..!
திருப்பூரில் தனது கணவருடன் சேர வேண்டும் என்ற ஆசையில் பெண் ஒருவர் பரிகாரம் செய்ய சென்றுள்ளபோது, சாமியார் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 10, பல்லடம் (Tiruppur News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் தங்கி தனியார் பின்னலாடை நிறுவனத்தில் (Knitting company) டெய்லராக வேலை செய்து வருகிறார். இவர் தனது கணவன், மகன் ஆகியோரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் யூ டியூப்பில் மாந்திரீகம் சம்மந்தமான வீடியோக்களை தொடர்ந்து பார்த்துள்ளார்.
பரிகார பூஜை: அப்போது, பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டியில் அர்ஜுன் கிருஷ்ணன் என்ற சாமியாரின் (Preacher) வீடியோக்களை பார்த்துவிட்டு, அங்குள்ள வராகி அம்மன் கோயிலுக்கு சென்று அவரிடம் தனது கணவன் மற்றும் மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு, பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனக்கூறி முன் பணமாக 10,000 ரூபாய் பணத்தை சாமியார் வாங்கியுள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு சில நாட்களுக்கு பிறகு பரிகாரம் செய்வதற்கு மேற்கொண்டு அதிக செலவாகும் எனக்கூறி, ரூ.1.50 லட்சம் கட்டினால்தான் பரிகார பூஜைகளை ஆரம்பிக்க முடியும் என்று சாமியார் அர்ஜுன் கிருஷ்ணன் கூறினார். இதனால், தனது சக ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவி போன்றவற்றில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். Benefits Of Lemon: உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் எலுமிச்சை பழத்தின் பயன்கள்..!
பாலியல் பலாத்காரம் (Rape): இந்நிலையில், பணத்தை கொடுத்தும் எந்தவிதமான பூஜைகளையும் அவர் செய்யாமல் தாமதப்படுத்தி வந்த சூழலில், பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், தனது வீட்டிற்கு வந்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் சாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் வீட்டு கதவுகளை மூடி வைத்துவிட்டு, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அந்த பெண் திருப்பூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்று புகார் மனு கொடுத்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சாமியாரின் கோயில் மற்றும் மாந்திரீக நிலையம் பூட்டப்பட்டது. தலைமறைவாக உள்ள சாமியார் அர்ஜுன் கிருஷ்ணனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

