மே 10, சென்னை (Health Tips): கோடைகாலம் தொடங்கிவிட்டாலே நம் வீட்டில் கட்டாயம் எலுமிச்சை பழம் (Lemon) இருக்கும். கொளுத்தும் வெயிலுக்கு ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் குடித்தால், நம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். எலுமிச்சை ஜூஸ் (Lemon Juice) வெயில் காலத்தில் மட்டுமல்லாமல், எல்லா காலத்திலும் குடிக்க ஏற்ற பானமாக உள்ளது. அந்த வகையில் எலுமிச்சை பழத்தில் உள்ள பயன்கள் பற்றி இதில் பார்ப்போம்.

புத்துணர்ச்சி அளிக்கும்: நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஜீரண ஆற்றலை மேம்படுத்துகிறது. மேலும், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு நல்லது: எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும். Nile Fever Spread: மிக வேகமாக பரவி வரும் நைல் காய்ச்சல்; பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாநில சுகாதரத்துறை எச்சரிக்கை..!

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்: காலையில் சுடுதண்ணீரில் 10 மில்லி லிட்டர் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

உடல் சூட்டை தணிக்கும்: எலுமிச்சை சாறை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் குறையும். மேலும், எலுமிச்சை பழத்தில் வாந்தி, வாய் குமட்டல், மயக்கம், கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை இதில் உள்ளது.

சளி, இருமலை விரட்ட உதவும்: எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது தேன் கலந்து பருகிவர வரட்டு இருமல் சரியாகும். எலுமிச்சை சாற்றை, மிதமான சுடுதண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி மற்றும் ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் இவை அனைத்தும் குணமாகும்.