Son Kills Mother: பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்.. தென்காசியில் கொடூரம்..!

தென்காசியில் குடும்ப தகராறில் பெற்ற தாயை, மகனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Son Kills Mother: பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்.. தென்காசியில் கொடூரம்..!
Crime Murder (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 16, பாவூர்சத்திரம் (Tenkasi News): தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரியப்புரம் அருகே உள்ள எல்லைப்புளி கிராமத்தை சேர்ந்த தம்பதி கருப்பசாமி-ஆறுமுகத்தாய் (வயது 65). இவர்களுக்கு ஐயப்பன் (வயது 48) உட்பட 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன், வடகரை அச்சன்புதூரில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் ஐயப்பன், அவரது மனைவி, மகன்களுடன் உள்ளூரில் வசித்து வந்துள்ளார். Five Students Arrest: சக மாணவரை சரமாரியாக தாக்கி வீடியோ வெளியிட்ட 5 மாணவர்கள் கைது..!

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி இறந்த நிலையில், ஆறுமுகத்தாய் அவரது இளையமகன் ஐயப்பன் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) மதியம் ஐயப்பனுக்கும், அவரது தாய் ஆறுமுகத்தாய்க்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஐயப்பன், தாயின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த ஆறுமுகத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக (Murder) உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).