Computer Engineer Suicide: காதல் தோல்வி; விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை..!

சென்னையில் கணினி பொறியாளர் ஒருவர் காதல் தோல்வியால் விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Computer Engineer Suicide: காதல் தோல்வி; விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை..!
Love | Hanging Suicide File pic (Photo Credit: Pixabay)

மே 17, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம், பொன்னி நகரை சேர்ந்த பூங்கொடி என்பவரது மகன் தினேஷ்கண்ணா (வயது 25). இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் (Software Company) பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தார். Vlogger Sexual Harassment Case: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க தம்பதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது; காவல்துறை அதிரடி.!

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தினேஷ்கண்ணா வீட்டில் உள்ள அறைக்கு உறங்க சென்றுள்ளார். அப்போது, அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டதை அவரது தாய் பூங்கொடி ஜன்னல் வழியாக பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, வளசரவாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தினேஷ்கண்ணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தினேஷ்கண்ணா இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது, காதல் தோல்வி ஏற்பட்டதை அடுத்து, விரக்தியில் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 17, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).