Watchman Arrested: உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி, பெண்ணை மிரட்டிய காவலாளி கைது..!
கோயம்புத்தூரில் பெண்ணை உல்லாசத்திற்கு வரச்சொல்லி வீடியோவை காட்டி மிரட்டிய, காவலாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மே 29, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், வேலாண்டிபாளையம் காந்தி காலனியில் மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 49). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக (Watchman) பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அங்கு வேலை பார்த்து வந்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. Counterfeiter Has Thrown Acid: பெண் நடத்தையில் சந்தேகம்; கள்ளக்காதலன் ஆசிட் வீசி தப்பி ஓட்டம்..!
இவர்கள் இருவரும் நாளடைவில் நெருக்கமாக பழகி, தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை, அந்த பெண்ணிற்கு தெரியாமல் ரகசியமாக அவருடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், இந்த வீடியோவை காட்டி தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால், மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான அவர், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், ரங்கசாமி மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். வரவில்லை எனில் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண் மறுபடியும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, சாய்பாபா காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரங்கசாமியை மீண்டும் கைது செய்தனர். பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 29, 2024 12:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

