ஆகஸ்ட் 16, பெரம்பூர் (Chennai News): சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே ஸ்டேடியத்தில் 78-வது சுதந்திர தின விழா (78th Independence Day) நேற்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்கள் படைப்பிரிவுகள் மற்றும் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஆர்பிஎஃப் (Railway Protection Force) அணிவகுப்பில், ஆர்பிஎஃப் ஐஜி மற்றும் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜிஎம் ஈஸ்வர ராவ் முன்னிலையில் தெற்கு ரயில்வே (Southern Railway) பொது மேலாளர் ஆர்என் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். Cuddalore Shocker: பூட்டிய வீட்டில் 50 வயது பெண் கொலை; தூக்கில் சடலமாக முதியவர்... திட்டக்குடியில் அதிர்ச்சி சம்பவம்.!
பின்னர் உரையாற்றிய ரயில்வே பொது மேலாளர், இந்திய ரயில்வே மற்றும் அதன் பணியாளர்கள் குறித்து பெருமிதமாக தெரிவித்தார். நாட்டின் முன்னேற்றம் மற்றும் ஒற்றுமைக்கு அவர்களின் ஆழ்ந்த பங்களிப்புகளை எடுத்துரைத்தார். இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தெற்கு ரயில்வே தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது என்பதையும் பொது மேலாளர் வலியுறுத்தினார்.
இதனையடுத்து நடைபெற்ற ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பில், தெற்கு ரயில்வே நாய் படையின் (Dog Show) ஈர்க்கக்கூடிய நாய் கண்காட்சி, ரயில்வே மைதானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை அங்குள்ள அனைவரும் கண்டு களித்தனர்.
RPF organized a dog show at the Railway Stadium in Perambur as part of the celebrations for the 78th Independence Day.#SouthernRailway pic.twitter.com/S80SYe69yd
— Southern Railway (@GMSRailway) August 15, 2024