Married Woman Suicide: இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேசிய காதல் கணவர்; கண்டித்த மனைவிக்கு நேர்ந்த சோகம்..!

சேலத்தில் தனது கணவர் பல பெண்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி வந்ததை கண்டித்ததை அடுத்து, மனைவி விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Married Woman Suicide: இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேசிய காதல் கணவர்; கண்டித்த மனைவிக்கு நேர்ந்த சோகம்..!
Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜூன் 07, சேலம் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள அய்யம் பெருமாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 25). இவர், வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் (Facebook) மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தொடர்ந்து அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியது. Teenager Sentenced To 20 Years Imprisonment: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை..!

இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், சந்துரு தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பல பெண்களிடம் பேசி வந்துள்ளார். இதனை அவரது காதல் மனைவி கண்டித்துள்ளார். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே கடந்த 4-ஆம் தேதி அன்று இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மிகவும் விரக்தி அடைந்த ஜீவா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 07, 2024 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).