Sexual Abuse | Court Judgement File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 07, திருப்பூர் (Tirupur News): தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பவர், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, 17 வயது பள்ளி மாணவியிடம் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த மாணவியை தேனிக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து வந்துள்ளார். Car-Lorry Accident: கார் மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி..! 5 பேர் படுகாயம்..!

இதுதொடர்பாக, மாணவியின் பெற்றோர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது, நேற்று இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தது. மேலும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி கடத்திச் சென்றதுக்கு, 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.