ஏப்ரல் 06, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு சூரியன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி கந்தன் (வயது 48)-ரமாவள்ளி (வயது 40). இத்தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கந்தன் உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். நேற்று மாலை கந்தனுக்கு இறுதி சடங்கு நடந்துமுடிந்தது. Benefits Of Jackfruit: பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? – விவரம் உள்ளே..!

இதனையடுத்து, கந்தனின் மனைவி ரமாவள்ளி கணவன் இறந்த துக்கத்தில் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் வீட்டின் கழிவறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை (Woman Hanging Suicide) செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள், உடனடியாக ரமாவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்துவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, நடுவீரப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.