ஏப்ரல் 06, சென்னை (Health Tips): பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றாக உள்ளது. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருக்கும். ஆனால், அதன் உள்ளே இருக்கும் சுளைகள் சுவையாகவும், அதில் பல மருத்துவகுணங்களும் அடங்கியுள்ளன. பலாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ATM Machine Robbery: நள்ளிரவில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் – காவல்துறையினர் தீவிர விசாரணை..!
பலாப்பழத்தின் பயன்கள்: பலாப்பழம் சாப்பிடுவதால் உடல் சோர்வு நீங்கி, நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த பழத்தில் உள்ள தாமிரச்சத்து, மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. பலாப்பழத்தில் 'வைட்டமின் சி' அதிகமாக இருப்பதால், ஆன்டி-ஆக்ஸிடன்டாகவும் இது செயலாற்றுகிறது. மேலும், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை குறைத்து இதய சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பலாப்பழம் செரிமானக் கோளாறு மற்றும் 'வைட்டமின் ஏ' மாலைக்கண் நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது. இதயம், மூளை வளர்ச்சி, நரம்புகள் வலுவடைய பலாப்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
மேலும், இதில் உள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத் தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இளமைத் தோற்றத்தை பெறவும் இது உதவுகிறது. இதில், மெக்னீசியம் அதிகம் உள்ளதால், எலும்புகள் வலுபெற்று எலும்பு சம்மந்தமான எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்கிறது. இந்தப் பழம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.