Three Children Bitten By Rabid Dog: வெறி நாய் கடித்து படுகாயம்; 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!
நாமக்கலில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 3 குழந்தைகளை வெறி நாய் கடித்ததில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மே 09, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே உள்ள வடுகம் பகுதியில் குழந்தைகள் சிலர் இன்று காலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தெரு நாய் (Street Dog) ஒன்று, விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தகளை கடித்துள்ளது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். Benefits Of Papaya Seeds: பப்பாளி விதையில் இவ்வளவு நன்மைகளா..? விவரம் உள்ளே..!
அங்கு காயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு சிறுவனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவருக்கு தையல் போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே, சென்னை நுங்கம்பாக்கம் பூங்காவில் 5 வயது சிறுமியை நாய் கடித்தது. அதனை தொடர்ந்து, சூளைமேட்டில் சாலையோரம் நடந்து சென்ற பெண்ணை நாய் கடித்து காயம் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து, நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை அளித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, ராசிபுரம் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
(The above story first appeared on LatestLY on May 09, 2024 04:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

